அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிநடை போட்டு வருகிறது தெறி. மேலும் ரசிகர்கள், விமர்சகர்கள், குடும்பங்கள், குழந்தைகள் என அனைவரிடமும் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது தெறி.

இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 102.4 கோடி வசூல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இது ஆதிகபுர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருபினும் இந்த பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் பெரிய மீடியா மூலம் உறுதியாகி உள்ளது.

துப்பாக்கி 2 வாரத்தில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. கத்தி 12 நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையுள் 6 நாளில் தெறி 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

SHARE
  • Facebook
  • Google Plus