Theri Tamil Movie Review and Rating | Theri Padathin Vimarsanam

Related Posts

Share This Post

Theri Review & Rating
Theri Rating

THERI MOVIE RATING – 3.75 / 5

Movie Name : Theri

Director : Atlee
Cast : Vijay, Samantha, Amy Jackson
Music : G.V. Prakash Kumar

THERI MOVIE REVIEW :

தெறி படம் ஒரு குழந்தை நல்லவனாகவும், கெட்டவனாகவும் வளர்வதற்கு ஒரு அப்பா தான் காரணம் என்ற ஒரு கருத்துடன் வழக்கமான போலீஸ் கதையை புதிதாக கொடுத்திருக்கும் படம் தான் தெறி.

முதலில் படத்தின் முக்கியமாக அனைவராலும் பேசப்படும் விஷயம், படத்தின் திரைகதை, ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆக்சன், டயலாக், பின்னணி இசை மற்றும் இதை அனைத்திற்கு உயிர் கொடுக்கும் நடிப்பு.

படத்தில் நடித்தவர்கள் :

விஜய் நடிப்பை பற்றி சொல்ல தேவை இல்லை படத்தில் காமெடி, ஆக்சன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என அனைத்திலும் தெறிக்க விட்டுவிட்டார் தளபதி.

நைனிகா நடிப்பில் சூப்பர் சும்மா நைனிகா, விஜய் வரும் காட்சிகள் அனைத்தும் படத்தில் அனைவரும் ரசிக்கும்படி அமைந்துள்ளது. எமி ஜாக்ஸன் நடிப்பிற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் இல்லை இருப்பினும் அவரது நடிப்பில் நன்று. ராதிகா விஜய்க்கு அம்மாவா வராங்க. அம்மா மகன் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது. ராதிகாவின் நடிப்பும் எதார்த்தமாக நன்றாக உள்ளது.

சமந்தா நடிப்பில் பிரமாதம் கண்டிப்பாக சமந்தா நடித்து வந்த படங்களில் இது அவரது நடிப்பில் பெஸ்ட் படமாக இருக்கும். மொட்ட ராஜேந்திரன் வரும் காட்சிகளில் சிரிப்பாக பேசியதோடு இல்லாமல் படத்தின் ஒரு கட்டத்தில் ஒரு நீண்ட டயலாக் பேசுகிறார் அது சூப்பர்.

வில்லனாக வரும் மகேந்திரன் நடிப்பில் நன்று ஆனால் படத்தில் அவருக்கு இன்னும் நடிபுக்கும் கதாப்பாதிரமும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பிரபு இவர் நடிப்பில் வழக்கம் போல நன்று.

ஜிவி பிரகாஷ் படத்தில் வரும் பின்னணி இசையுள் சும்மா பின்னி பெடலேடுத்திருகிறார். ஆனால் பாடல்கள் நன்றாக இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

படத்தின் பிளஸ் :

விஜய்யுன் நடிப்பு படத்தின் முக்கிய பங்கு. சும்மா எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் சும்மா தெறிக்க விடுகிறார். நைநிகா கியூட் மற்றும் ரியல் நடிப்பினால் அனைவரையும் கவர்கிறார். படத்தில் போலீஸ் விஜய் வரும் ஸ்கூல் சீன், இடைவேளை காட்சியுள் வில்லனுடன் பேசுவது, விஜய் பேசும் மலையாளம் டயலாக்  மற்றும் படத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லை, குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் ரவுடிகள் என இது போன்று படத்தில் பல விஷயங்கள் அற்புதம் அதற்கு அட்லீக்கு வாழ்த்துக்கள்.

படத்தின் மைனஸ் :

படத்தின் கதை புதிதாக இல்லை, வழக்கம் போல் வரும் ஒரு போலீஸ் கதை. மேலும் படத்தின் சமந்தா விஜய் லவ் சீன் முதல் குழந்தை பிறக்கும் காட்சிகள் வரை படம் மெதுவாக நகர்கிறது. படத்தில் ஒரு கட்டத்தில் விஜய்யை பேய் என்று சொல்லுவது பார்க்க நன்றாக இருந்தாலும் அங்கு லாஜிக் மிஸ் ஆகிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை.

இயக்குனர் அட்லீ :

விஜய் சொன்னதை போல் ஆக்சன் எடுக்கணும் என்ற அட்லீயுன் வெறி தான் இந்த தெறி ஆனால் ஆக்சன் மட்டும் அல்ல காமெடி, செண்டிமெண்ட் என அனைத்தையும் கொடுக்க நினைத்திருக்கும் இந்த அட்லீயுன் வெறி தான் இந்த தெறி என கூரலாம். கண்டிப்பாக அட்லீ வேற லெவல் ஆகிட்டார்.

மொத்தத்தில் தெறி :

ஒரு எளிமையான கதையை தெறியாக மாற்றியதற்கு அட்லீக்கு நன்றி. விஜய் ரசிகர்களுக்கு படம் கண்டிப்பாக ஒரு பெரிய ட்ரீட். சினிமா ரசிகர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் ஒரு நல்ல படமாக அமையும். படம் கடிப்பாக அணைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கும்படி அமைந்துள்ளது. கண்டிப்பாக தெறி படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள். தெறி தெறிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தெறி படம் மிக பெரிய வெற்றி பெற கெத்து சினிமா சார்பாக வாழ்த்துகள்.

THERI MOVIE RATING – 3.75 / 5



Tags : Theri Review, Theri Rating, Tamil Movie Theri Story, Theri Review In Tamil, Theri Story, Theri Full Review, Vijay Nainika Review, Vijay Atlee Theri Review, Theri Vimarasanam, Theri Thirai Vimarsanam.