ஒரு நாள் கூத்து ரேடிங்  – 3.25 / 5

ஒரு நாள் கூத்து விமர்சனம் :

ஒரு நாள் கூத்து இன்றைய காலத்து திருமணம் பற்றியும்.  28 வயதுக்கு மேல் திருமண ஆகாத பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் ஏற்படும் வலியை பற்றியும் அழகாக எடுத்து சொல்லியுருக்கும் படம்.

படத்தில் நடித்தவர்கள் :

அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் ஐடி-யுள் பணிபுரியும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை நாம் பார்த்த தினேஷ்ஷை விட இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் பார்க்கலாம். நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. நன்றாகவே நடித்துள்ளார்.

பாலா சரவணன் படத்தில் சில காட்சிகள் வந்தாலும் நன்றாக சிரிக்கவைத்து செல்கிறார். மேலும் கருணாகரன் கொஞ்சம் புதுமையாக காமெடி டிராக்கை விட்டு விலகி கொஞ்சம் சீரியஸ்ஸாக நடித்துள்ளார். 

மியா ஜார்ஜ் கல்யாணம் ஆகாத மாப்பிள்ளை தேடும் அமைதியான அழகான பெண்ணாக வருகிறார். இவரது அழகில் இவர் வரும் காட்சிகளும் அழகாக அமைந்துள்ளது.

நிவேதா ஐடி-யுள் பணிபுரியும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ரிதிக்கா ஆடியோ ஜாக்கி யாக வருகிறார். இருவரது நடிப்பும் நன்று .

படத்தின் பிளஸ் :

முதல் பாதி அனைத்து தரப்பினருக்கும் பிடித்தது போல் அமைந்துள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்று. இன்றைய திருமண சூல்னிலைகலை சொல்லியுருக்கும் விதம் நன்று.

படத்தின் மைனஸ் :

இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக செல்கிறது. தேவையற்ற காட்சிகள் இரண்டாம் பாத்தியுள் உள்ளன. 

மொத்தத்தில் ஒரு நாள் கூத்து :

ஒரு திருமணம் என்பது சாதாரண விசயம் இல்லை என்பதையும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களின் கஷ்டம் என்ன என்பதை உணர்த்தும் படமாக அமைந்த்துள்ளது. இன்றைய காலத்து இளைஞர்கள் பார்க்கவேண்டிய படம். 

ஒரு நாள் கூத்து ரேடிங்  – 3.25 / 5