Hiphop Tamizha – Takkaru Takkaru Album About Jallikattu Full Detail !

Related Posts

Share This Post

சமீபத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஜல்லி கட்டுக்கு ஆதரவாக புதிய விடீயோ ஆல்பத்தை வெளியிட்டார். “டக்கரு டக்கரு” என தொடங்கும் இப்பாடலில் அவர் கூறியது.

“ஒரு காளையை தழுவும்போது, அந்த காளை எல்லாவற்றையும் தாண்டி ஒரு 50 அடி தூரம் சென்றுவிட்டால் அந்த காளைக்கு வீரியம் அதிகம் என்று கூறி அதை இனப்பெருக்கத்திற்கு அனுப்புவார்கள். தோற்றுப்போன காளைகளை விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். இதற்கு தடை கோருபவர்கள் யாரென்று கேட்டால், நிறைய பேர் அரசாங்கம் என்று கூறுகிறார்கள். உண்மையில், தமிழக அரசாங்கம் இன்று மட்டுமல்ல, என்றைக்கும் ஆதரவாகத்தான் இருந்து வருகிறது. இதற்கு தடை கோருபவர்கள் நிறைய தனியார் அமைப்புகள்தான். அதில் பல பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

கிரிக்கெட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் கிரிக்கெட் நிபுணர்களிடம் கேட்கிறோம். கால் பந்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த விளையாட்டை பற்றி தெரிந்தவர்களிடம் கேட்கிறோம். ஆக, ஜல்லிக்கட்டை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், மாடு வளர்க்கிறவர்களிடம் கேட்கவேண்டும், மாடு பிடிப்பவர்களிடம் கேட்கவேண்டும்.

10 வருடத்திற்கு முன்பு சுமார் 9 லட்சம் காளைகள் இருந்தது. இப்போது சுமார் 60 ஆயிரம் காளைகள்தான் இருக்கிறது. இனி 3 வருடத்தில் என்னாகும். இதற்கு முக்கியமான காரணம் நமது அறியாமையால்தான் இது அழிந்துகொண்டு வருகிறது. இது நமது அடையாளம். அடையாளத்தை இழந்தால் நமது தாய்நாட்டில் நாம் அகதிகளாகத்தான் வாழவேண்டும். கண்டிப்பாக சிந்திப்போம்..! செயல்படுவோம்..! என்று கூறி முடித்துள்ளார்.