வீரம், வேதாளம் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணியுள் மூன்றாவது படம் உருவாக உள்ளது.  இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளனர்.

இதன் படப்பிடிப்பு ஜுலை 15-ல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அஜித் – அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக உள்ளனர்.

மேலும் இந்த படத்தில் தல அஜித் ஸ்டைலிஷ் மற்றும் ஸ்மார்ட் லுக்கில் இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் FBI  ஏஜென்ட்டாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

கண்டிப்பாக இந்த படம் பில்லா போன்று மாஸ் & ஸ்டைலிஷ் படமாக வரும் என்பதில் சந்தேகம் இல்லை. கண்டிப்பாக தல ரசிகர்களுக்கு இது பெரிய விருந்தாக இருக்கும்.