தமிழ் சினிமாவில் இருந்து உலக அளவில் பிரபலமானவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் பிரபல மலேசிய பட தயாரிப்பாளர் Mohd Rafeezi Mohd Zin, ரஜினி மற்றும் ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கி சானை ஒரு படத்தில் இணைந்து நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இப்படத்துக்கு Chini Saga என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை சோனம் கபூர் ஹீரோயினாக நடிப்பார் தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மையாகும் பட்சத்தில் உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் விருந்து காத்திருப்பது உறுதி. கூடிய விரைவில் இதை பற்றிய தகவல் வெளியாகும்.