இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 2.O மற்றும் பாகுபலி 2 . இந்த இரண்டு படங்களில் பட்ஜெட்டை முறியடிக்கும் வகையில் சுந்தர்.சி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு விஜய் அல்லது சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது.

நிலையில் தற்போது இளையதளபதி தமிழிலும் மற்றும் மகேஷ் பாபு தெலுங்கு வெர்ஷனிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஒரே படத்தில் தமிழ், தெலுங்கு பதிப்பில் இருவரும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.

இச்செய்தி இருத்தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி இன்னும் உறுதியாகவில்லை.