Anitha Sampath Instagram –

Anitha Sampath Instagram -

Anitha Sampath Instagram – | Posted on 24/Dec/2018 18:47:17

Anitha Sampath Instagram – #anitha #anithaanchor #anithasampath #anchor #suntv Yercaud Hill Station
Anitha Sampath Instagram – சுரேஷ் சார்…!!! இன்னும் நினைவு இருக்கிறது..பள்ளி சிறுமியாக இருந்த காலத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சன் டிவி டாப்10 மூவீஸில் இவர் குரல் கேட்டு விழித்த நாட்கள்..90களில் டிவி என்றாலே சன் டிவி மட்டும் தான்..டாப்10 மூவீஸில் 10 படங்களின் சில காட்சிகளை பார்த்துவிட்டாலே ஏதோ அத்தனை படத்தையும் தியேட்டரில் முழுமையாக பார்த்துவிட்டதை போல் ஒரு சந்தோஷம்..அதிலும் இவர் முகத்தை பார்க்காமல் எந்த 90s கிட்ஸின் ஞாயிறுகளும் முழுமை பெற்றுவிட முடியாது..அப்படி எல்லோரையும் போல நானும் மிகச்சிறிய வயதில் இருந்தே சுரேஷ் சாரின் ரசிகைதான்.. .
அப்படி டிவி பெட்டிக்குள் மட்டுமே பார்த்து ரசித்த லெஜண்டரி செய்தி வாசிப்பாளரோடு நானும் ஒரு நாள் செய்தி வாசிப்பேன் என கனவிலும் நினைத்துப்பார்த்ததில்லை..
.
சன் டிவி செய்திகள் வாசிக்க தொடங்கிய ஒரு வருடத்தில் முதன் முறையாக இன்று சுரேஷ் சாருடன் செய்தி வாசித்து இருக்கிறேன்..
இத்தனை பெரிய செய்தி வாசிப்பாளரோடு சமமாக உட்கார்ந்து செய்தி வாசித்ததில் தன்னடக்கம் கலந்த பெருமையும், நிறைய மகிழ்ச்சியும்..!!!
.
டாப்10 மூவிஸ்..கடந்த 21 வருடங்களாக 1000 எபிசோடுகளை கடந்து..அத்தனைக்கும் ஒரே தொகுப்பாளர் சுரேஷ் சார் தான்…சுரேஷ் சாரை தெரியாத ஒருவரிடம் இவருக்கு 29 வயது என்று சொன்னால் சிறிதளவும் சந்தேகமின்றி நம்பிவிடுவார்கள்..ஆனால் சுரேஷ் சாரின் செய்தி வாசிப்பு அனுபவம் மட்டுமே 23 வருடங்கள்!!!!!!!! .
தலைவா யூ ஆர் கிரேட்!!

Check out the latest gallery of Anitha Sampath