Anitha Sampath Instagram – தோழி ஷைலஜா (பள்ளி கால நண்பி) என் திருமணத்திற்கு அளித்த அன்பு பரிசுகளில் இந்த புடவையும் ஒன்று…
.
அவள் கல்லூரி நாட்களில் ஷாட் பிலிம் எடுக்கும் போது நடிப்பே வராத என்னை நடிக்க வைப்பாள்..(கூடவே அனு என்னும் தோழியும்) மொக்கையாக நடித்திருந்தாலும் அந்த கேமரா அனுபவம் இப்போது எமர்ஜென்சி வெப் சீரீஸ் வரை உதவியுள்ளது.. .
ஐயோ எனக்கு நடிக்கலாம் வராது டி எனும் போதும்..; தமிழ் பேச்சுப்போட்டிகளில் நான் பேசுவதையெல்லாம் பேசி காட்டி..ஆனா நியூஸ் ரீடர் லாம் ஆக முடியுமா தெரியலடி எனும் போதும்…ஹே நல்லாதான் டி நடிக்கிற,பேசுற..சும்மா நீயே inferiority complex ஆ பேசாத என்று சொல்லி எப்போதும் ஊக்கப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்..
.
ஷைலஜா,அனு…அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ என் பல படிநிலைகளை கடந்ததற்கு அவர்களின் ஊக்கமும் ஒரு காரணம்.. IAS அதிகாரிக்கும் ABCD கற்றுக்கொடுத்த ஆசிரியர் தான் அடித்தளம் என்பது போல்…
.
@shailaja_ravi ❤️
@director_anusathya ❤️ | Posted on 10/May/2020 16:04:30