Anitha Sampath Instagram - ஒரு வருடம் ஆன மாதிரி சுத்தமா தெரியல..ஏதோ 4-5 மாசம் ஆன மாதிரி தான் இருக்கு..கோரோனா காலத்துல எல்லாருக்கும் அப்படிதான் இருக்கோ என்னவோ.. . நேற்று எங்கள் முதலாம் ஆண்டு வாழ்விணை ஏற்பு நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. தான் வேலைக்கு போற அவசரத்துலயும் எனக்கு காபி போட்டு எழுப்புற.. . நான் ஒரு ஈவண்ட் போயிட்டு வந்தா என் அம்மா மாதிரி எனக்கு உப்பு மிளகாய் கொண்டு வந்து சுத்தி போடுற.. . நான் விரும்புற உடைய அணிய அனுமதிக்கிற.. . நான் independent ஆ இருக்கணும்னு நெனக்கிற.. . என் வளர்ச்சிக்கு முழு காரணமா இருந்து..அதுக்கான பாராட்டுக்கு என்ன மட்டும் காரணமாக்கிட்டு..பின்னாடி ஓரமா நின்னு அமைதியா ரசிக்கிற.. . என் அம்மா வீட்டையும் அவன் வீடா நெனக்கிற கணவன் அமைஞ்சது நிஜமாவே எனக்கு பெரிய வரம் தான்..தேவதை என்றாலே பெண்களைத்தான் குறிப்பிடுவாங்க..ஆனா என் வாழ்வின் தேவதை பிரபாதான்.. . சும்மா யார் மேலயும் காதல் வந்துடாது..விழுந்து விழுந்து நான் காதலிக்கிறேன்னா அந்த அளவுக்கும் மேலான அன்பு அங்க இருந்தும் வருவதுதான் காரணம்.. எந்நேரமும் தங்கம் செல்லம்னு கொஞ்சுறது காதல் இல்ல.. எப்போதும் காம உணர்வுலயே இருக்குறதும் காதல் இல்ல.. காதல் ங்றது வேற..அது வார்த்தைகளையும் தொடுதல்களையும் கடந்தது.. . காதலிக்கும் போதும் கல்யாணத்துக்கு பிறகும் பிரபாவுக்கு உருக்கமா மெசஜ் அனுப்பும் போதெல்லாம் நான் எழுதுற கடைசி வரியை தான் இப்பவும் சொல்றேன்..
ஒரு வருடம் ஆன மாதிரி சுத்தமா தெரியல..ஏதோ 4-5 மாசம் ஆன மாதிரி தான் இருக்கு..கோரோனா காலத்துல எல்லாருக்கும் அப்படிதான் இருக்கோ என்னவோ.. . நேற்று எங்கள் முதலாம் ஆண்டு வாழ்விணை ஏற்பு நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.. தான் வேலைக்கு போற அவசரத்துலயும் எனக்கு காபி போட்டு எழுப்புற.. . நான் ஒரு ஈவண்ட் போயிட்டு வந்தா என் அம்மா மாதிரி எனக்கு உப்பு மிளகாய் கொண்டு வந்து சுத்தி போடுற.. . நான் விரும்புற உடைய அணிய அனுமதிக்கிற.. . நான் independent ஆ இருக்கணும்னு நெனக்கிற.. . என் வளர்ச்சிக்கு முழு காரணமா இருந்து..அதுக்கான பாராட்டுக்கு என்ன மட்டும் காரணமாக்கிட்டு..பின்னாடி ஓரமா நின்னு அமைதியா ரசிக்கிற.. . என் அம்மா வீட்டையும் அவன் வீடா நெனக்கிற கணவன் அமைஞ்சது நிஜமாவே எனக்கு பெரிய வரம் தான்..தேவதை என்றாலே பெண்களைத்தான் குறிப்பிடுவாங்க..ஆனா என் வாழ்வின் தேவதை பிரபாதான்.. . சும்மா யார் மேலயும் காதல் வந்துடாது..விழுந்து விழுந்து நான் காதலிக்கிறேன்னா அந்த அளவுக்கும் மேலான அன்பு அங்க இருந்தும் வருவதுதான் காரணம்.. எந்நேரமும் தங்கம் செல்லம்னு கொஞ்சுறது காதல் இல்ல.. எப்போதும் காம உணர்வுலயே இருக்குறதும் காதல் இல்ல.. காதல் ங்றது வேற..அது வார்த்தைகளையும் தொடுதல்களையும் கடந்தது.. . காதலிக்கும் போதும் கல்யாணத்துக்கு பிறகும் பிரபாவுக்கு உருக்கமா மெசஜ் அனுப்பும் போதெல்லாம் நான் எழுதுற கடைசி வரியை தான் இப்பவும் சொல்றேன்.. "உன்ன பாக்காமலே போய் இருந்தா, நான் என்ன ஆகிருப்பேன் பப்பு!" 😒 . "கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடா"! @itsme_pg