Ammu Abhirami Instagram – அழகான காலை வேலையில , கஷ்டபட்டு எழுந்து , குடும்பத்துல ஒவ்வொருதரா line ல நின்னு சில்லுனு தண்ணில தலைக்கு குளிச்சிட்டு..
அட கோவில் போறோம், சமத்து பொண்ணா ரெடி ஆகலைனா எப்படி ?
அழகா ஒரு summer friendly சுடிதார் போட்டு , லக்ஷணமா பொட்டு, கண் மை, கொஞ்சம் பூ கொஞ்சம் வெட்கம் கலந்து நம்ம இஷ்ட தெய்வத்தை பார்க்க போற அந்த feeling-ஏ Vera level !
கோவில் உள்ள போற அப்போ வரும் அந்த கற்பூர வாசத்துக்கு நிகர் வேற ஏதும் இருக்கா?
கூட்டத்துல நின்னு, நெரிசல தாண்டி சாமிய ஒரு நொடி அதிகம் பாத்துட்டா…. அர்ச்சகர் கிட்ட தீர்த்தம் விபூதி வாங்கிட்டா…. அப்பாடா என் பாரம் எல்லாம் போய்டிச்சினு ஒரு மன நிறைவு…
வெளிள வர்ரப்போ ஒரு sweetest uncle கைல சக்கரை பொங்கல் பாத்தேன், ஓ பிரசாதம் விக்கிறாங்க போலனு என்னை மறந்து “ஐ சக்கரை பொங்கல்னு” கத்திட்டேன்!
அப்போ அவர் உடனே, ஐயோ வாங்க வாங்க நீங்க வாங்கிபீங்கலோனு தெறியல அதான் கேட்கல.. please கூச்சபடாம வாங்கனு அவங்க family காக வச்சிருந்த சக்கரை பொங்கலை அவ்ளோ ஆசையா அவரு எனக்கும் கைல கொஞ்சம் குடுத்தாரு.. அம்மா கைல சாப்பிட்ற போது கிடைக்கிற அன்பு கொஞ்சம் அந்த பொங்கல்லயும் கலந்து இருந்துச்சு.
சந்தோஷம், மன நிறைவு. எல்லாமே நம்பிக்கை தானே…
நல்லதை மட்டும் நம்புவோம்…
நல்லதை மட்டும் நினைப்போம்…
ஓம் நம சிவாய✨ | Posted on 23/Apr/2023 15:27:23