Pranika Dhakshu Instagram – நண்பன்…!!!! ✨ ( TOM & JERRY )
தயக்கத்தோடு
ஆரம்பிக்கும்
முதல் உரையாடல்….!!!!✨
பயத்தோடு
பகிர்ந்து கொள்ளப்படும்
அலைபேசி எண்கள்….!!!!✨
அவள் தவறாக
எண்ணிவிடுவாளோ?-என்று
யோசித்து,யோசித்து
பேசும் தருணங்கள்…!!!✨
காதல்,கீதல் என
உளறுவானோ?-என்று
குழப்பத்தோடு
பேசும் ஆரம்பக்காலங்கள்….!!!✨
புரிதல் தொடங்கும்
நேரத்தில் தானாக
மலர ஆரம்பிக்கும்
நட்பு மலர்….!!!✨
புரிந்து கொண்ட பின்,
ஆண்-பெண் வித்தியாசத்தை
காணாமல் ஆக்கும்
நட்பின் ஆழம்…!!!!✨
தோல்விகண்டு துவலுகையில்
புதுத்தெம்பூட்டி,அடுத்த
முயற்சிக்கு அடிதளமிடவைப்பாள்
அவனை அவன் தோழி….!!!!✨
ஆடவர் நால்வர் முன்
தைரியத்தோடும்,பெண்மை மாறாமலும்,
வாழ வழிகாட்டுவான்
அவளுக்கு அவள் தோழன்….!!!!✨
முடிவில்லா முடிவில்-நட்பு
வளர்ந்து நிற்கும்?
புரிந்து இருக்கமாட்டார்கள் என்னை,
என் நண்பனை
விட வேறு யாரும் நன்றாக
என்னும் ரீதியில்…! ✨
.
.
#friendship #friends #girlboyfriendship #truefriends #pranikadhakshu #zara #meenakshiponnunga #foreverfriends | Posted on 21/Jun/2023 23:29:04