R. Sarathkumar Instagram – போர்ச்சுக்கல், லிஸ்பனுக்கு படப்பிடிப்புக்கு சென்ற நிலையில், படப்பிடிப்பு இல்லாதநேரத்தில் இன்று லிஸ்பனில் இருந்து 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள “Basilica of our Lady of the Rosary of FATIMA” சென்றிருந்தேன்.
1917 – ஆம் ஆண்டு மேரியன்னை காட்சியளித்த இடமான புனித ஓக் மரம் லாஸ்பெரின் தேவாலயமும், கன்னி மேரியை நேரில் கண்டதாக தெரிவித்த லூசியா டாஸ் சாண்டோஸ் மற்றும் அவரது உறவினர்களான பிரான்சிஸ்கோ மற்றும் ஜசிந்தா மார்டோ ஆகியோரின் நினைவிடமும் (சேப்பல் ஆஃப் தி அப்பாரிஷன்ஸ்) அமைந்திருந்ததை கண்டு, அருகில் இருந்த தேவாலயத்தில் நிறைவாக பிரார்த்தனை செய்து வந்தேன். உடன் கடலோரக் கவிதைகள் ராஜா மற்றும் குஷ்பூ. | Posted on 23/Aug/2023 20:40:16