M. K. Stalin Instagram – தமிழ்நாட்டின் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தொலைநோக்குப் பார்வையோடு கடந்த 26.10.2010-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் ரூ.10,158 கோடி மதிப்பீட்டில் முன்மொழியப்பட்ட #NCTPS (Stage-III) திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
ஆணையிடப்பட்டதிலிருந்து மூன்றாண்டுகளில் முடிக்க எண்ணியிருந்த இந்தத் திட்டம், ‘கலெக்ஷன் – கரப்ஷன் – கமிஷன்’ அதிமுக ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த நிலையை மாற்றி, நமது #DravidianModel அரசு பொறுப்பேற்றதும் மூன்றாண்டுகளில் முடுக்கிவிட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளோம். | Posted on 07/Mar/2024 21:29:43