Raadhika Sarathkumar Instagram – பாரத பிரதமர் திரு.நரேந்திரமோடிஜி அவர்களை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
நானும், எனது மனைவி திருமதி.ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி அவர்கள் தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலஷ்மி – நிக்கோலை ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம். மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன்.
@narendramodi @amitshahofficial
@bjp4india @bjp4tamilnadu @annamalai_kuppusamy @radikaasarathkumar @varusarathkumar #VaralaxmiSarathkumar #marriage #primeminister #modiji #meet | Posted on 28/Jun/2024 19:20:08