ராஜா ராணி படத்தின் முுலாம் இயக்குநராக அறிமுகம் ஆனா அட்லீ தனது முதல் படத்திலே மிக பெரிய வெற்றி அடைந்தார். அதை தொடர்ந்து தற்போது வஜய்யை வைத்து தெறி எடுத்து முடித்து விட்டார்.

இந்த நிலையுள் “ஏ பார் ஆப்பில் எண்டர்டைன்மெண்ட்” என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து உள்ளார். இதன் மூலமாக முதல் முதலாக தயாரிப்பாளராக கலம் இறங்குகிறார் அட்லீ.

இவர் முதல் தயாரிப்பில் வெளியாகும் படத்தில் ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி என பலர் நடிக்க உள்ளனர். இந்த படத்திற்கு “சங்கிலி பங்கிலி கதவ தோரா” என்று வித்தியாசமான பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு “காஞ்சனா” படத்தில் ஒரு பாடலில் இடம் பெரும் வரி என்பது குறிப்பிடத்தக்கது.