நேற்று சென்னையுள் தெறி படத்தின் ஆடியோ வெளியுட்டு விழா நடந்தது அதில் விஜய் பேசியது உங்களுக்காக.

பொதுவா ஆடியோ விழாவில் இசையமைப்பாளர் தான் ஹீரோ. ஆனா எனக்கு ஹீரோ தான் இசையமைப்பாளரே. விர்ஜின் பசங்களின் தலைவர் ஜி.வி.பிரகாஷ்.
இயக்குனர் அட்லியின் வெறி தான் இந்த தெறி.
இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் செல்பி புள்ள, இன்னொருவர் குல்பி புள்ள.
எனது ரசிகர்களும் அவர்கள் வாழ்வில் மிகப்பெரிய உயரத்தை அடையவேண்டும்.
ஒரு தோல்விக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனால் ஒரு வெற்றிக்கு அந்த 1000 தோல்விகள் தான் காரணமாக இருக்க முடியும்.
இன்னொருவர் வெற்றியை இலக்காக வைக்காதீர்கள். உங்கள் வெற்றியை இன்னொருவர் இலக்காக வைக்கும்படி செய்யுங்கள்.
எனக்கு என் படத்தை பற்றி பெருமையாக பேசி பழக்கம் இல்லை. அதனால்தான் பொதுவாக பேசுகிறேன். போர் அடிச்சா மன்னிச்சுக்கோங்க, ஸ்பார்க் கிடைச்சா எடுத்துக்கோங்க. ஃப்ரீ அட்வைஸ்.
SHARE
  • Facebook
  • Google Plus