சசிகுமார் நடிப்பில் வெற்றிவேல் படம் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படம் வரும் ஏப்ரல் 29-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது இப்படம் ஏப்ரல் 22-ம் தேதியே வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் கிளீன் “யூ” சான்றிதழ் கிடைத்திருகிறது.

சசிக்குமார் ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்திருக்கிறார் மேலும் பிரபு, தம்பி இராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சசிக்குமாரின் நாடோடிகள், சுந்தர பாண்டியன் படங்களை போல இந்த படமும் குடும்பங்கள் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

SHARE
  • Facebook
  • Google Plus