சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்து விட்டார். இவர் நடித்த ரஜினி முருகன் படம் 50 கோடிக்கும்  மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையுள் தற்போது யு-டியூபிலும் munnani நடிகர்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறார். இதில் அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் படத்தின் பாடல்கள், டீசர் தான் 1 கோடி ஹிட்ஸை தாண்டியது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்ற ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டியுள்ளது. இதற்கு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் இருவரும் தங்களது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தனர்.

SHARE
  • Facebook
  • Google Plus