சமீபத்தில் இளையதளபதி விஜய் கனடாவில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தார். அவரது மனைவி சங்கீதாவின் உறவினர் திருமணம் என்பதால் குடும்பத்துடன் சென்றிருந்தார்.

விழாவில் இவர்களுக்கு பாதுகாப்பாக இருவர் இருந்தனர். அவர்கள் விஜய்யுடன் செல்பி எடுக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால் முகம் சுளிக்காமல் அனைவருடனும் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.