அப்பா படத்தின் ரேடிங் – 3.25 / 5

Movie Name : Appa

Director : Samuthirakani
Cast : Samuthirakani, Thambi Ramaiah, Namo Narayana

Music : Ilaiyaraaja

அப்பா விமர்சனம் :

ஒரு ஐந்து குழந்தைகளை மையமாக வைத்து ஒரு அப்பா தனது குழந்தையை எப்படி வளர்க்கவேண்டும் என்பதை ஒரு படமாக இல்லாமல் ஒரு படைப்பாக கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி.

கதை களம் :

ஒரு ஐந்து குழந்தைகள் வாழ்க்கையை மையமாக வைத்து. அவர்களது பெற்றோர்கள் எப்படி அவர்களை வளர்க்கிறார்கள். இந்த சமுதாயம் மற்றும் கல்வி முறை அவர்களை எப்படி மாற்றுகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் நடித்தவர்கள் :

சமுத்திரக்கனி நடிப்பை பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை நடிப்பின் உச்சக்கட்டம். தம்பி ராமையா வழக்கம் போல எதார்த்தமான நடிப்பை கொடுத்து அசத்தியுள்ளார்.

இவர்களது மகன்கள் மற்றும் மகள்களாக நடித்திருக்கும் காக்கா முட்டை விக்னேஷ்,  ராகவ், நாசத் மற்றும் யுவலக்ஷ்மி, கேப்ரியல்லா, திலிப்பன், வினோதினி அனைவரும் தங்களுடைய கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார். 

படத்தின் பிளஸ் :

படத்தில் பேசும் வசனங்கள். அப்பா மகனுக்கான உறவை காட்டியிருக்கும் விதம். இளையராஜாவின் இசை. மேலும்  அனைவரது நடிப்பு. 

படத்தின் மைனஸ் :

கதை புதிதாக இல்லை. மற்றபடி குறை என்று பெரிதாக ஒன்றும் இல்லை.

மொத்தத்தில் அப்பா  :

கண்டிப்பாக அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுடன் பார்க்கவேண்டிய படம். இது போன்ற அப்பா இல்லை என்ற வருத்தம் படம் பார்க்கும் பல பேருக்கு வரும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்பா படத்தின் ரேடிங் – 3.25 / 5

Tag : Appa Review, Appa Movie Rating, Appa Tamil Movie Review In Tamil,Appa Movie Review In Tamil, Appa Vimarsanam, Appa Movie Thirai Vimarsanam, Appa Movie Full review, Appa Samuthirakani Movie review, Appa Pdathin 2016 Tamil Movie review.

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.