Jackson Durai Review & Rating

ஜாக்சன் துரை படத்தின் ரேடிங் – 2.75 / 5

Movie Name : Jackson Durai

Director : Dharani Dharan
Cast : Sathyaraj, Sibiraj, Bindu Madhavi

Music : Siddharth Vipin

ஜாக்சன் துரை விமர்சனம் :

இந்தியா – பிரிட்டிஷ் காலத்து சண்டையை மையப்படுத்தி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கிறது ஜாக்சன் துரை. 

கதை களம் :

ஒரு கிராமத்தில் இரவு 9 மணிக்கு மேல் ஜாக்சன் துரை என்ற பேய் தொல்லை இருப்பதால். அந்த ஊர் ப்பிரசிடண்ட் சென்னையில் இருக்கும் துப்பறியும் நிலையத்தில் மனு கொடுக்கிறார். 

இந்த பிரச்னையை தீர்த்து வைக்கும் எஸ்.ஐ ஆக சிபி ராஜ் வருகிறார். வந்த இடத்தில் ஊர் ப்பிரசிடண்ட் மகள் பிந்து மாதவி மேல் காதல் வருகிறது. எனவே அவரிடம் பொண்ணு கேட்கிறார். 

இந்த நிலையில் பிந்து மாதவி மொறை மாமன் கருணாகரனும் பொண்ணு கேட்கிறார். அப்போது ப்பிரசிடண்ட் இந்த ஊரில் இருக்கும் ஜாக்சன் துரை பங்களாவில் இருவரும் 7 நாட்கள் தங்கி யார் உயிருடன் வருகிறாரோ அவருக்கு தான் என் பெண் என கூறுகிறார். 

இருவரும் பேய் பங்களா செல்கிறார்கள் அங்கு ஜாக்சன் துரை என்ற பேய் யார் ? இருவரின் நிலைமை என்ன ? கடைசியில் யார் பிந்து மாதவி உடன் சேருகிறார் ? என்பது மீதி கதை.

படத்தில் நடித்தவர்கள் :

சிபிராஜ் வழக்கமான நடிப்பை கொடுத்துள்ளார். பிந்து மாதவிக்கு பெரிய அளவில் நடிப்பு இல்லை என்றாலும் கொடுத்த பகுதியை நன்றாக நடித்துள்ளார்.

சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் பிரமாதம். மேலும் காமெடி கதாபாத்திரத்தில் யோகி பாபு மற்றும் கருணாகரன் நடிப்பிலும் சரி காமெடியிலும் சரி அனைவரையும் நகைசுவையுள் ரசிக்க வைத்துள்ளனர். 

படத்தின் பிளஸ் :

முதல் பாதியில் காமெடி நன்று. கருணாகரன், யோகி பாபு காமெடி ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசை கொஞ்சம் நன்று.

படத்தின் மைனஸ் :

இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்கிறது. பாடல்கள் பெரிதாக ஒன்றும் இல்லை. திரைக்கதையில் கொஞ்சம் தெளிவு இல்லை.

மொத்தத்தில் ஜாக்சன் துரை :

காமெடி படங்களை விரும்புவர்களுக்கு முதல் பாதி நன்றாக இருக்கும். படம் பயமாக இருக்கும், காமெடியாக இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் கண்டிப்பாக உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது.

ஜாக்சன் துரை படத்தின் ரேடிங் – 2.75 / 5

Tag : Jackson Durai Review, Jackson Durai Tamil Movie Full Review, Jackson Durai Movie Rating, Jackson Durai Rating, 2016 Tamil Movie Jackson Durai Vimarsanam, Jackson Durai Thirai Vimarsanam, Jackson Durai Movie Review In Tamil, Jackson Durai Movie Review In Tamil Website. Jackson Durai Sathya Raj Movie Review.

SHARE
Editor in chief - Avid blogger and celebrities favourite reporter. Superhero when it comes to finding an perfect angle for selfie, yes a selfie freak.