தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் ரஜினி, கமல். இவர்களுக்கு அடுத்து தற்போது விஜய், அஜித் தான் வசூல் மன்னர்கள்.

இந்த நிலையில் இவர்கள் நடித்து கடைசியாக வெளியான படம் வேதாளம் மற்றும் தெறி. இதில் எந்த படம் அதிக வசூல் என்பதை பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

இதில் அவர் கூறுகையில் ‘வேதாளம் தமிழ் நாட்டு வசூலில் தெறியை விட அதிகம் என்றும் ஆனால் உலக அளவில் பார்க்கையில் தெறி தான் வசூலில் நம்பர் 1 என தெரிவித்துள்ளார்.

வேதாளம் படம் கமல் நடித்த தூங்காவனம் படத்துடன் வெளியானது. தெறி தமிழ்நாட்டில் சில பகுதிகளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.