Lakshmy Ramakrishnan Instagram – ஜுன்-30
இன்று என் பெற்றோரின் மணநாள். அவர்களின் 50வது திருமண நாளை நாங்கள் கொண்டாடிய நினைவுகள் என்றும் மறக்க முடியாதது.
மணவாழ்க்கையில் சமத்துவம், தோழமை, நம்பிக்கை, ஒற்றுமை, போன்ற பண்புகளை என் பெற்றோர்களிடம் இருந்து தான் கற்றேன்.
அப்பா பொறுமை இழந்து கோபப்பட்டு கத்துவதை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் கோபப்படுகிறார் என்பதை நன்கு உணர்ந்து மிக அழகாக கையாளுவார் அம்மா. அவர்களுக்குள் பரஸ்பர மரியாதை எப்போதும் இருந்தது (ஏதோ அது வெளித்தோற்றமாக அல்லாமல் அது உண்மையாக, மிக ஆழமாக இருந்தது).
அம்மா இறந்தப்போது அவர்கள் 62 வருடம் ஒன்றாக வாழ்ந்திருந்தனர். இங்கு திருமணம் , கணவன் மனைவிக்கிடையே இருக்க வேண்டிய நம்பிக்கை, பற்றிப் பேசும் போது, திருமணம் என்பதே ஏதோ மிகைப்படுத்தப்பட்ட தேவைக்கு அதிகமாக கொண்டாடப்படும் ஒன்றாக சமுதாயத்தின் முற்போக்காளர்களால் தவறாக பார்க்கப்படுகிறது. அதனாலேயே இந்த பதிவை போடும் முன் ஒன்றுக்கு நூறு முறை சிந்திக்க வேண்டியதாயிற்று. எந்த ஒரு உறவுக்கும் அஸ்த்திவாரம் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை தான்.
நம்பிக்கை, மரியாதை இல்லாத, ஆபாசமான பேச்சு/நடத்தைகள் இருக்கும் ஒரு உறவுக்குள் குடும்பம், குழந்தை, சமுதாய நலன் போன்றவற்றை கருதி ஒரு நாள் கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
#VanithaVijaykumar வனிதவனிதா விஜயகுமார் அவரது தாய், தந்தையை, தங்கைகளை பற்றி தவறாக பேசிய நேர்காணல்களை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒருவர் எங்கள் 37 வருட திருமண வாழ்க்கையைப் பற்றி, என் கணவர் முனைவர் ராமகிருஷ்ணன் போன்ற ஒரு பண்பாளரைப் பற்றித் தரக்குறைவாக பேசியது ஆச்சரியம் அல்ல. திருமண வாழக்க்கையின் அடிப்படை சாராம்சத்தை, நம்பிக்கை & கண்ணியம் பற்றி எல்லாம் வனிதாவிற்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு மனநிலையை தூக்கிக் கொண்டு வரும் ஒருவருடன் உரையாடலில் ஈடுபட்டது என்னுடைய தவறுதான்.
எப்படியோ நானும், என் கணவரும் அப்படிப்பட்ட ஒருவரின் ஏச்சு பேச்சுகளை கேட்க வேண்டும் என்று எழுதி இருக்கிறது போல. அது மட்டும் இல்லாம எங்களை ‘Iyer ‘ ஆக பார்க்கும் ஒரு சிலருக்கு சந்தோஷபட நானே சூழள் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டேன். இத்தகைய நிகழ்வுகள் எப்போதும் எனக்கு நல்ல பாடமாகவே இருந்திருக்கிறது🙏 | Posted on 01/Jul/2021 22:11:56