M. K. Stalin Instagram – கடந்த இரு ஆண்டுகளில் #UAE, #Japan மற்றும் #Singapore நாடுகளுக்கு நான் மேற்கொண்ட அரசுப் பயணங்களின் மூலம், 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 7,442 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.
அதேபோல, இம்முறை #Spain நாட்டுக்கு நான் மேற்கொள்ளும் பயணத்திலும், பல முன்னணி நிறுவனங்களிடம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் மனிதவளத்தை எடுத்துக்கூறி, நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் முதலீடுகளை ஈர்க்க உள்ளேன்.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் எனும் நம் இலக்கு தொலைவில் இல்லை!
#InvestInTN #ThriveInTN | Posted on 27/Jan/2024 21:15:26



