Hemalatha M

Hemalatha M Instagram – சேமிப்பின் மகத்துவம் ❤️

ஆனந்த சீனிவாசன் சார் பல வீடியோக்களில் தங்கம் வாங்குவதை பற்றி குறிப்பிடுவார். உங்ககிட்ட கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை கொஞ்சம் தங்கமாகவும் வாங்கி வையுங்கள் என சொல்லுவார்.

எனக்கு தங்க நகை மீது பெரிதாக விருப்பம் இல்லை. மேலும் அதில் செய்கூலி, சேதாரம், GST என கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும்.

அதனால் அவ்வப்போது கொஞ்சம் பணம் இருந்தாலும் கடந்த சில வருடங்களாக Sovereign Gold Bond இல் முதலீடு செய்தேன்( இப்போது இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ) கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதை தேவையில்லாமல் செலவு செய்யாமல் 2 Unit, 3 unit என கடந்த 4 வருடங்களாக முதலீடு செய்தேன்.

இப்படியாக கடந்த 4 வருடங்களில் 50 Unitகள் சேர்ந்தது. நான் முதலீடு செய்ய தொடங்கிய போது ஒரு யூனிட் விலை 4800 ( 24 கேரட் ஒரு கிராம் தங்க விலை ) . இப்போது 24 கேரட் ஒரு கிராம் விலை 12,200 . இந்த பணம் Maturity ஆகும் போது பாப்பாவின் உயர்கல்விக்கு பயன்படும்.

உங்களிடம் கொஞ்சம் பணம் இருந்தாலும் இப்போதே சேமிக்க தொடங்குங்கள். பணம் சிறிதோ, பெரிதோ அல்ல விஷயம். சேமிப்பு பழக்கமும், காலமும் தான் நம் முதலீட்டை இரட்டிப்பாக்கும்.

கடந்த 20 வருடங்களாக சேமிப்பு பழக்கத்தை கொண்டிருக்கிறேன். சின்ன சின்னதாக சேமிக்க ஆரம்பித்தேன். ஆனால் காலம் கூட கூட அது நல்ல பலன்களை கொடுக்கிறது. 1000 ரூபாய் சம்பாதிக்கும் போதும் 50000 ரூபாய் சம்பாதிக்கும் போதும் எனக்கு ஒரே Formula தான்

“ எவ்வளவு சம்பாதித்தாலும் 20% சேமிப்பு. மிச்சம் உள்ள 80 சதவீத பணத்தில் என்ன Life style இல் வாழ முடியுமோ அதுதான் நம் வாழ்க்கை . இந்த 80 சதவீத பணத்தில் 5 சதவீதம் மீதமாக இருந்தால் அதுவும் சேமிப்பு தான். தேவைக்கும், அத்தியாவசியத்திற்கும், ஆசைக்கும் இடையே நூலளவு தான் வித்தியாசம். இதை சரியாக புரிந்து கொண்டால் எல்லோரும் பணக்காரர்கள் தான்”

இறுதியாக ,

இப்படி சேமித்தால் தான் Generation Wealth ஐயும் நாம் உருவாக்க முடியும் ❤️

#hemarakesh #savings #inspirewithhemarakesh | Posted on 13/Oct/2025 11:27:21

Hemalatha M
Hemalatha M

Check out the latest gallery of Hemalatha M