பாவாட என்ற படத்தில்  ப்ரித்திவிராஜ், அனூப் மேனன், மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் கதை படி ப்ரித்திவிராஜ் விஜய் ரசிகராக வருகிறார் .
விஜய்யின் துப்பாக்கி படத்திற்கு  முதல் நாள்  ப்ரித்திவிராஜின் கதாபாத்திரம், அடித்து பிடித்து நுழைவுச்சீட்டு வாங்குவது போன்றொரு காட்சி இடம்பெறுகிறது. அத்துடன் அவர் நடிகர் விஜய்யின் பெரிய படத்திற்கு  மாலை அணிவது போல் மற்றொரு காட்சி உள்ளது. அதனால் கேரளாவில் உள்ள விஜய் ரசிகள் பேருவகை அடைந்ததாகக் கூறப்படுகிறது.
பாவாட  இம்மாதம் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.