செல்வராகவன் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் படம் என்றால் வருடகணக்கில் எடுப்பார் என்பதை மாற்றும் வகையுள் முன்றே மாதத்தில் இறுதி கட்ட படபிடிப்பில் வந்து விட்டது இந்த படம்.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினினா, நந்திதா மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம் ஆகா உள்ளது. செல்வராகவனின் முதல் த்ரில் படமான இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் செல்வராகவன் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.