Pichaikkaran Movie Rating : 3/5

Movie Name : Pichaikkaran

Director : Sasi
Cast : Vijay Antony, Satna Titus
Music : Vijay Antony

Pichaikkaran Movie Review : 

விஜய் ஆண்டனி நடித்திருக்கும் பிச்சைக்காரன் படம் ஒரு தாய் மகன் பாசத்தையும் பிச்சைக்காரர்களின் வாழ்க்கையையும் அழகாக செண்டிமெண்டாக சொல்லியுருகின்றனர். 
விஜய் ஆண்டனி பணக்காரனாய் வரும் போதும் பிச்சைக்காரனாய் வரும்போதும் நடிப்பில் நன்று. படத்தில் வரும் அம்மா மற்றும் கதாநாயகி ஆகிய இருவரும் நடிப்பில் நன்று. 
படத்தில் சில இடங்களில் கொஞ்சம் மெதுவாக நகர்கிறது மேலும் அடுத்து என்ன நடக்கும் என்பது நமக்கு முன்பே தெரிந்த கதையாக இருப்பதால் சுவாரஸ்யம் எதுவும் இல்லை. இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை கச்சிதமாக சொல்லிவிட்டார் இயக்குனர் சசி. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் நன்று. 
பணக்காரனாய் இருக்கும் விஜய் ஆண்டனியுன் அம்மாவிற்கு விபத்தால் உடல் நலம் பாதிக்கபடுகிறது. இதை குணப்படுத்த எவளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. கடைசியுள் ஒரு சாமியார் சொல் படி 48 நாள் அனைத்தையும் விட்டு பிச்சைகாரணாய் வாழ்கிறார். இவர் பிச்சைகாரன் என தெரியாமல் காதலிக்கிறார் நடிகை சட்னா. இவர் பிச்சைகாரணாய் இருக்கும் போது என்ன பிரச்னை வருகிறது ? இவரது அம்மா குணமடைந்தாரா ? கதாநாயகியுடன் சேர்ந்தாரா ? என்பது மீதி கதை.
மொத்தத்தில் பிச்சைக்காரன் படம் பிச்சைக்காரர்களுக்கும் ஒரு மனசு இருக்கிறது ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்தும் படமாக அமைந்துள்ளது. செண்டிமெண்ட் மற்றும் ஒரு அழுத்தமான மெசேஜ் இருக்கும் படத்தை பாக்க விரும்புபவர்கள் தாரளமாக பிச்சைகாரனை போய் பார்க்கலாம்.

Tag : Pichaikkaran Review, Pichaikkaran Rating, Tamil Movie Pichaikkaran Review, Pichaikkaran Review In Tamil, Vijay Antony Pichaikkaran Movie Review, 2016 Movie Pichaikkaran Full Review And Rating. Pichaikkaran Vimarsanam. Pichaikkaran Kathai.