இயக்குனர் சாம் ஆன்டனுடன்  ஜி.வி பிரகாஷ் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேரு இருக்கு’. இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதைதொடர்ந்து இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 28-ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டீசரை இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு பிறகு இதிலும் ஜி.வி பிரகாஷ் ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார். பிரபல லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

SHARE
  • Facebook
  • Google Plus